
எழுத்து மொழி, பேச்சு மொழி குறித்த சந்தேகங்கள் தொடர்பான நீண்ட விவாதங்கள் சென்ற நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டன. மொழிப்பிரதிகளை MKமுற்றிலும் எதிரெதிர் கோணத்தில் எழுதியும், பேசியும் வருகிறோம் என்ற பிரான்ஸ் தத்துவமேதை தெரிதா (Derrida) அதற்கான Grammatology என்ற புதிய இலக்கணக் கோட்பாட்டினையும் உருவாக்கினார். ஒவிய, இசை மொழிகளை அர்த்தப்படுத்துவதிலும் இதே சிக்கல் தான் நிரம்பி வழிfகிறது. அவரவர் கோணத்தில் புதுப்புது வியாக்யானங்களுடன் ஓவிய மொழிகள் பேசப்படுகின்றன். அதிலும் குறிப்பாக அரூப ஓவிய மொழி விளக்கத்திற்கு அப்பாற்பட்டு இருந்து போதிலும், ஒருவித பொதுத்தன்மையுடன் (commonness) எல்லோராலும் புரிந்து கொள்ள முடிகிறது.
கோட்டோவியங்களிடையே நீண்டு பயணித்த ஆதிமூலத்தின் அரூப ஓவிய மொழி மாற்றம் அவற்றை புரிதலில் பல அர்த்தத் தளங்களை, அதிர்வுகளை ஏற்படுத்தின. இளம் ஓவியர்களிடையே, சிற்றிதழ் எழுத்தாள நண்பர்கள், நவீன காலரிக்களில் ஆதிமூலம் அங்கும் இங்கும் எங்குமாக புத்தம் புதிதாக அரும்பத் தொடங்கினார். இந்திய நிறுவனங்கள் எஸ்.ஹெச்.ராசா, தையப் மேத்தா போன்று ஆதிமூலம் ஓவியங்களையும் தனது தொகுப்பில் (Ccollections) வைத்திருப்பதைப் பெருமையாகப் பேசிக் கொண்டன. ஓவியச் சந்தையில் தமிழக ஓவியங்கள் மதிப்போடு பேசப்படுவதற்கு ஆர்.பி.பாஸ்கரன், கே.எம்.ஆதிமூலம் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஆதிமூலத்தில் கோட்டோவியங்களுள் தற்போது மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ள காந்தி கோட்டோவியங்கள், மன்னர் கோட்டோவியங்கள், சுடுமண் சிற்ப கோட்டோவியங்கள், தீப்பொறி போன்ற வெளி சார்ந்த துகள் கோட்டோவியங்கள், ஓவிய அரங்குகளில் ஆதிமூலத்தின் Restrospectiveவாக காட்சிகொள்கின்றன. இவற்றுள் விதவிதமான மெலிந்த தோற்றத்துடன் காந்தியின் கோட்டோவியங்கள் சிறப்பானவை. உளவியலில் அறிஞர் எரிக் எரிக்ஸன், வரலாற்றுப் பார்வையில் ரோகேஷ்சதா போன்றோர் காந்தியின் சுய சரிதைக்கு பல புதிய அர்த்தங்களை தந்தது போல், ஆதிமூலத்தின் காந்தி கோட்டோவியங்கள் இன்றைய உலகிற்கு மிகத் தேவையான புதியதோர் காந்தி உலாவினை தொடங்கி வைத்தார்.
தமிழக எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், fக.நா. சுப்ரமணியன், ஜெயகாந்தன், மௌனி போன்றோர்களையும், சிற்றிதழ்களிலும் நூல் அட்டைகளிலும் தனது கோட்டோவியங்களால் ஆதிமூலம் அலங்கரித்தார். இவரது மன்னர் கோட்டோவியங்கள், ஆட்சி செலுத்திய மன்னர்கள் போல் இல்லாமல் காலனி ஆதிக்கத்தில் மாட்டிக் கொண்டு அடங்கி ஒடுங்கி, உயிரற்ற, உடைவாளுடன் தலைப்பாகையுடன் அமர்ந்திருக்கும் மன்னர்களாக தோன்றினர்.
வெளி பற்றி (space)d பிரக்ஞை ஓவியர்களையும் விட்ட பாடில்லை. வெளியை தனது ஜியோமிதி கோளங்Kகளால் நிரப்பினார். எஸ்சர் (Escher) என்ற ஓவியர். விஞ்ஞானி ஜன்ஸ்டைனின் நான்காம் பரிமான (space-time) கோட்பாடு அறிமுகம் ஆனவுடனேயே அலெffக்ஸான்டர் கால்டரின் (Alexander Calder) நிற்கும் சிற்பங்கள் (stabiles) தீடிரென நகரும் (mobiles) சிற்பங்களாயின. ஆதிமூலத்தின் வெளி பற்றிய பிரக்ஞையும் இவ்வாறு தன் ஓவியங்களுள், வெளியை ஒரு புதிய அர்த்த பாவத்துடன் வெளிபடுத்தத் தொடங்கினார். இவ்வோவியங்கள் நிலக்காட்சிகளா, மலைமுகடுகளோ, சிவப்பு நீல வெண்மை நிறங்களின் வண்ணச் சிதறல்களா, உடைந்த கண்ணாடி வர்ணக் கோலங்களா என்று விதவிதமாக என்னும் படியான புதுப்புதுவிதமாக இவ்வோவியங்கள் வெளிப்படத் தொடங்கின. இவ்வோவியங்களுக்கு ஆதிமூலம் Untitled என்றே தலைப்பிட்டார். கேன்வாசில் நீண்ட பரப்பில், தன் தூரிகை தொட்டதால் விதவிதமான வண்ணங்Kகள் இவரை இழுத்து சென்றனவா அல்லது வண்ணங்களையும் வடிவங்களையும் வரைந்து ரசித்தாரா என்ற வினா எழும்பும். உணர்வுபூர்வமான இவ்வரூப (Emotional abstraction) ஓவியங்களை ரசிக்கலாமே ஒழிய, அவற்றை விளக்க முற்படும் போது தோல்வியுற்ற மனோபாவம் நம்மை தொற்றிக் கொள்ளும்.
மனித வாழ்வின் இருப்பையும், அதன் இல்லாதிருத்தலையும் (Being and Nothingness) ழான் போல் சார்த்தார். ஆல்பர் காம்யூ போன்றோர் தத்துவங்களாக எழுதினர். தமிழில் வாழ்வின் நிலையாமையைக் குறித்த திருமூலர் திருமந்திரங்கள், பட்டினத்தார் பாடல்கள் பரவலாக இன்றும் பேசப்படுகின்றன. இருப்பினும் நம் தோள் மீது கைபோட்டு சிநேகித்த ஆதிமூலம் தன் வாழ்க்கை பயணத்தில் நடுவழியில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு என்னை பார்ப்பதை நிறுத்திவிட்டு, எனது படைப்புகளை தொடர்ந்து பார் என்றார் போலும். ஆதிமூலத்தின் அரூப மாற்றத்தை பகிர்ந்து கொள்ள அவரது ஓவியங்கள், மிக நெருங்கிய அவரது நண்பர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. ff

2 கருத்துரைகள்:
Sir, this article is a very suitable and respectable work in the memeory of Adhimoolam.
SELVAM S
GNK,
Kumbakonam.
சிறந்த பதிவு.
நன்றி
விஜய்
www.poetryinstone.in
கருத்துரையிடுக