மற்ற படங்கள்
மகாத்மா காந்தி என்றும் தேசப்பிதா காந்தி என்றும் இன்றளவும் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அண்ணல் காந்தியடிகள். ஆனால் அவரோ தான் அவ்வாறு அழைக்கப்படுவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கவே விரும்பினார். சென்ற இடமெல்லாம் இடைவிடாத மக்களின் ஏகோபித்த இக்கோஷங்களிடையே அவர் நினைத்தது நடைபெறாமல் போனது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் தரிசனத்திற்கு சென்ற காந்தியைக் கண்ட மக்கள் கூட்டம் ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்று கோஷமிட்டபோதும் மிகவும் எரிச்சலடைந்தார். ‘கோவிலுக்குள் மகாத்மாவை (விஸ்வநாதர்) தரிசனம் செய்ய இங்கு வந்தால் இங்குள்ள மகாத்மாக்களின் (தன்னை மகாத்மா என்று கோஷமிடும் மக்கள்) தொல்லை தாங்க முடியவில்லையே, நீங்கள் மகாத்மா என்று கோஷமிடுவதை முதலில் நிறுத்துங்கள். கோயிலை இவ்வளவு அசுத்தமாக வைத்திருக்கிறீர்களே. வெளிநாட்டினர் இக்கோயிலைப் பார்த்தால் எவ்வளவு கேவலமாக நம்மை நனைப்பார்கள்’ என்று கோபமாகப் பேசினார் காந்தி.
அண்ணல் காந்தியடிகளை, மகாத்மா கந்தி என்று அழைக்கும் போது அவரது சிறந்த அரசியல் மேதமை, மனித நேயப் பண்புகள் சார்ந்த ஆளுமை (Personality) குறைத்து மதிப்பிடப்படுவதாகவே யோகேஷ் சதா (Yogesh Chadha) போன்ற வரலாற்று அறிஞர்கள் உணருகிறார்கள். ஏனெனில் ஆத்மா, பரமாத்மா, ஜீவாத்மா என்ற பதங்களுக்கு விளக்கங்கள் அளித்த ஆன்மீகவாதியல்ல காந்தி. மிகச் சாதாரண மனிதராகத் தன்னை ஏற்றுக்கொள்ளும் சுபாவமே காந்தியிடம் கடைசி வரையிலும் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் தன்னை ஒரு அற்ப ஆத்மா (அல்பாத்மா) என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சாதாரண மனிதராகவே தன்னை நினைத்து வந்தார்.
1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைமை வகித்தார். உடனடியாகச் சுதந்திர பிரகடனத்தை அறிவியுங்கள் என்று எங்கும் குரல் ஒலித்த போது என்ன செய்வதென்று தெரியவில்லை. முழுச் சுத்ந்திரம் எனும் அர்த்தம் பொதிந்த சுயராஜ் (Swaraj) தீர்மானத்தை மிக அவசரமாகக் காந்தி கொண்டு வந்தார். சபர்மதி ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். சுயராஜ் பற்றி விளக்கம் கேட்ட போது தாகூரிடம் ‘என்னைச் சுற்றி முழுதும் இருள் பரவியுள்ளது. ஏதேனும் ஒரு துளி ஒளி வெளிச்சம் கூட என் கண்களுக்குத் தோன்றவில்லை, என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை’ என்று ஒரு சாதாரண மனிதரைப் போல் தனது இயலாமையை வெளிப்படுதுகிறார் காந்தி. ஒரு தீர்க்கதரிசியை (Visionary) போன்றோ, எல்லாம் முற்றுணர்ந்த மகாத்மா போன்றோ அவர் என்றும் தன்னைக் காண்பித்துக் கொள்ளவில்லை.
காந்தியடிகளைத் தேசப்பிதா காந்தி என்று அழைக்கும் போதும் மறுபடியும் இது போன்ற கேள்விகள் தான் மேலோங்கி வருகிறது. ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலைப் பெறுவதற்கு காந்தி ஒரு மிகப் பெரிய காரணமாக இருந்த போதிலும், தென்னாப்பிரிக்காவிலிந்து அவர் இந்தியாவிற்கு வருவதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்திய வரலாற்று அரசியல் தீவிரத் தன்மையோடு நடைபெறத்தான் செய்தது. இருப்பினும் தலைவர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்ட இந்திய விடுதலை உணர்வை மக்களுக்கு எடுத்துச் சென்ற மாமனிதராக காந்தி ஒருவரே இருந்தார். காந்தியைத் தேசப்பிதா என்று அழைக்கும் போதும், இந்து, இந்தியா என்ற குறுகிய சிமிழுக்குள் காந்தியை அடைக்கும் முயற்சியாகவே பொருத்தமற்ற ஒன்றாக இருக்கிறது என்று இன்றைய வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியும், தலை சிறந்த மனிதப் பண்பும், உலக அநீதியை எதிர்க்கும் குரலாகவும் உள்ள காந்தியின் ஆளுமை இவ்விதமான அடைமொழி வார்த்தைகளால் நீர்த்துப் போவதும், சில நேரங்களில் அர்த்தமற்றதாகவும் தோன்றுகிறது. இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், இன்றைய வன்முறைச் சார்ந்த உலக அரசியல் சூழலில், நீதி சார்ந்த ஒரு தலைவனுக்காக ஏங்கும் உலக மக்களுக்கான ஒரு குறியீடாகத் திகழ்கிறார் காந்தி.
அன்றைய தேசியத் தலைவர்களையும், மக்களையும் ஒரு சேர நேசித்தும், அவர்களுடன் பழகியது, தமக்கு எதிரான கருத்துகளுடைய அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தல் போன்ற சமூக நட்புறவுப் பண்புகள் (Social Intelligence) காந்தி ஒருவரிடமே குவிந்திருந்தன. ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், முகம்மது அலி ஜின்னா, அம்பேத்கார், மௌன்பேட்டன் பிரபு, இர்வின் போன்ற வைஸ்ராய்கள் போன்ற பல எதிரெதிரான கொள்கைகள் உடைய தலைவர்களிடம் நல்லுறவு வைத்துக் கொள்ளும் சமூகப் பண்பு (Social Negotiability) காந்தி ஒருவரிடமே இருந்தது. பால்ய காலத்திலும், தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய போதும் மற்றவரோடு பழகுவதில் மிகக் கூச்ச சுபாவம் உடையவராகவே காந்தி திகழ்ந்தார். பிற்காலங்களில்தான் தனக்கு எதிரான கருத்து உடையவர்களோடும், ஏன் முப்பது கோடி மக்களால் கவரப்படக் கூடிய அளவிற்கு சமூக நட்புணர்வுப் பண்புகளைப் பெற்றிருந்தார் காந்தி. தற்கால நிறுவன்ங்களின் தலைமை, தேசியத் தலைவர்களின் தலைமைப் பண்புகளுக்கு ஆதாரமாகத் திகழ்வது சமூக நட்புணர்வுப் பண்புகளே என்று டேனியல் கோல்மேன் (Daniel Golman) போன்ற நிர்வாகவியல் அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சமூக நட்புணர்வுப் பண்புகளைக் காந்தி அக்காலத்தே பெற்றிருந்தது இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த எளிய மனிதரிடம் முப்பது கோடி மக்களைத் தன் பக்கம் இழுத்த அரிய சக்தி எப்படி வந்தது என்றெல்லாம் அமெரிக்கா நாட்டில் விளம்பரப்படுத்தும் அளவிற்கு அதிசயமான மனிதராகவே இன்றும் காந்தி தோன்றுகிறார். தென்னாப்பிரிக்க விடுதலையில் வாலிபத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வயோதிகத்தில் விடுதலை பெற்று வெளிவந்த, ‘சிறையிலும் வாடாத கறுப்பு மலர்’என்று தென்னாப்பிரிக்கா மக்களால் அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, சிறையிலிருந்த போது தினம் தினம் காந்தியையே நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.
தென்னாப்பிரிக்காவில் மைக்கேல் கோட்ஸ் (Michael Coates) என்ற பாதிரியார் காந்தியைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற நினைத்த போதும், அவர் கழுத்தில் அணிந்துள்ள துளசி மாலையை உடைக்க முயன்ற போதும் கோபம் கொள்ளவில்லை காந்தி. மாறாக 'எனது அன்னை அளித்த புனிதமான அன்பளிப்பு இது என்றும், கிறிஸ்துவத்தை எப்போதும் மதிக்கின்ற நான் ஒரு இந்துவாகவே இருக்க விரும்புகின்றேன்' என்று அன்போடு மறுத்தார்.
சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான் பிரிந்த பிறகு. காந்தியைத் தீர்த்துக் கட்டும் அபாயம் இருப்பதால் காந்திக்கு உடனடியாகப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வல்லபாய் பட்டேல் அவரிடம் வேண்டிக்கொண்ட போதும் காந்தி பிடிவாதமாக அதை மறுத்துவிட்டார். ‘எனது பிரார்த்தனைக் கூட்டத்தில் வருபவரைச் சோதனை இடுவதைப் போன்ற அநாகரீகம் உலகில் வேறு ஒன்றும் இல்லை. எனது உயிருக்கு அளிக்கும் பாதுகாப்பு சாதாரண மனிதருக்கு உங்களால் அளிக்க முடியுமா? என் உயிரை உங்களால் பாதுகாக்க முடியாது. கடவுள் ஒருவர் மட்டும் தான் அதைப் பாதுகாக்க முடியும்' என்று படேலிடம் கோபமாகப் பேசினார் காந்தி.
தன் கடைசி நாளில் தன்னைப் பார்க்க வந்த வல்லபாய் படேலிடம் ‘லண்டனிலிருந்து வெளிவந்த டைம்ஸ் (Times) இதழைக் காண்பித்து 'உங்களுக்கும் நேருவுக்கும் உள்ள கருத்து வேற்றுமை, லண்டன் வரை சென்றுள்ளதைப் பாருங்கள். உங்கள் கருத்து வேற்றுமை, நாட்டின் அழிவிற்குத் தான் வழிவகுக்கும். இருவரில் ஒருவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். அதை யார் என்று பிறகு சொல்கிறேன்' என்றார். காந்தி மாலை 5 மணி கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பத்து நிமிடங்கள் கால தாமதமாகவே சென்றார். மேடையின் ஆறு மரப்படிகளில் மீது ஏறி பொதுமக்களைப் பார்த்து, அவர்களைக் காத்திருக்க வைத்த குற்ற உணர்வோடு 'நமஸ்கார்' என்று இரு கரங்களாலும் மக்களை வணங்கினார் காந்தி. சிறிது நேரத்தில் கூட்டத்தை விலக்கி விட்டு வேகமாக காந்தி முன் வந்து நின்றான் நாத்துராம் கோட்சே எனும் இளைஞன். மூன்று முறை துப்பாக்கியால் சுட்டான். காந்தியின் கும்பிட்ட கரங்கள் தற்போது அவிழ்ந்து விழுந்தன. ஹே ராம் என்று காந்தியின் உதடுகள் முணுமுணுத்தன. மென்மையான காந்தியின் உடல் தரையில் விழுந்தது.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக